காதலியை கொடூரமாக கொன்று சாக்கடையில் வீசிய பூசாரி - அதிர்ச்சி சம்பவம்!
தந்து கள்ள காதலியை பூசாரி ஒருவர் கொடூரமாக கொன்றுவிட்டு சாக்கடையில் வீசிய சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூசாரி
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள சரூநகரில் உள்ள ஒரு கோவிலின் பூசாரியாக இருப்பவர் அய்யாகரி வெங்கட சூர சாய்கிருஷ்ணா. இவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாக உள்ளார்.
இவர் சரூர்நகரில் வசிக்கும் அப்சரா என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தார். தற்பொழுது, ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலைய காவல் நிலையத்தில் தனது காதலியை காணவில்லை என்று புகாரளித்துள்ளார்.
கொடூர கொலை
இந்நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில். இவர் கூறியவை அனைத்தும் பொய் என்றும் இவர்தான் அவரை கொலை செய்துள்ளார் என்றும் கண்டறிந்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், "சாய்கிருஷ்ணாவுடனான தொடர்பு காரணமாக அப்சரா கர்ப்பமாகியுள்ளார். இதனால் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் பூசாரியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சாய்கிருஷ்ணா, ஜூன் 3-ம் தேதி காரில் அப்சராவை நகரின் புறநகரில் உள்ள ஷம்ஷாபாத் மண்டலத்தில் உள்ள சுல்தான் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அப்சராவின் தலையில் பாறாங்கல்லால் தாக்கி அடித்துக் கொன்றுள்ளார்.
இதன் பின் அப்சரா உடலை பையில் கட்டி காரில் சரூர் நகருக்கு கொண்டு வந்து கோயில் பின்புறம் உள்ள பாதாளச்சாக்கடையில் வீசியுள்ளார். அப்சராவின் உடலை மீட்டுள்ளோம்" என்று கூறியுள்ளனர்.