நண்பனுடன் நெருக்கம்: காதலியை கொடூரமாக கொன்று வீடியோ வெளியிட்ட நபர்!

Attempted Murder Gujarat Crime Madhya Pradesh
By Sumathi Nov 12, 2022 08:11 AM GMT
Report

காதலியை கொன்று அந்த வீடியோவை இன்ஸ்டாவில் நபர் பகிர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் மோசடி

குஜராத்தைச் சேர்ந்தவர் அபிஜித். இவருக்கும் மத்தியப்பிரதேசம், ஜபல்பூரைச் சேர்ந்த சில்பா என்பவருக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

நண்பனுடன் நெருக்கம்: காதலியை கொடூரமாக கொன்று வீடியோ வெளியிட்ட நபர்! | Man Kills Girlfriend Video On Instagram

இந்நிலையில், அபிஜித்தின் பிசனஸ் பார்ட்னர் உடன் சில்பா நெருக்கமாக பழகி வந்துள்ளார். மேலும், சில்பா இருவரிடமும் ஆசையாக பேசி ரூ.12 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்ற முயன்றுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து இருவருக்கும் தெரியவர அந்த்ப் பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

 கழுத்தறுத்து கொலை

அதற்காக அவரை தனியார் விடுதி ஒன்றில் ரூம் எடுத்து அங்கு வரச்சொல்லி அழைத்துள்ளனர். இவரும் சென்ற நிலையில், சில்பாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் அபிஜித். மேலும் அதனை வீடியோவாக பதிவுச் செய்து, தன்னை ஏமாற்றியதற்காகத்தான் கொலை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில், அது வேகமாக பரவத் தொடங்கியது. அதனையடுத்து இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அபிஜித்தை தேடி வருகின்றனர்.