பிரசாதம் தரேன் உள்ளே வா.. கோவிலுக்குள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி!
சிறுமியைக் கோவிலுக்குள் அழைத்து பூசாரி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
தேனி
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது.

இந்த கோவிலில் திலகர் என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு வயது 70 . இந்த நிலையில் நேற்று மாலை கோவில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர், சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கி கோவிலுக்குள் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி பதறி அடித்து கோவிலிலிருந்து வெளியே வந்துள்ளார். தொடர்ந்து சிறுமி அழுது கொண்டு இருக்க நடந்ததைப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பாலியல் சீண்டல்
இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பகவதி அம்மன் கோவில் முன் முன்பாக திரண்டனர். இதனைச் சற்றும் எதிர்பாராத பூசாரி அவர்கள் தன்னை தாக்கி விடுவார்கள் என எண்ணி கோவிலைப் பூட்டிக் கொண்டு உள்ளே ஒளிந்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் குறித்து பெரியகுளம் வடகரை காவல்துறைக்குப் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறை கோவிலுக்குள் ஒளிந்திருந்த பூசாரியை வெளியே அழைத்து வந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வைக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம் IBC Tamil