இறக்கம் காட்டிய தக்காளி விலை - ஆனால்.. உச்சத்திலேயே இஞ்சி, பீன்ஸ்..
இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
காய்கறி விலை
கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை அதிகரித்தே விற்பணையாகி வருகிறது. இந்நிலையில் தற்போது சற்றே குறைந்துள்ளது.
உச்சத்தில் இருந்த தக்காளி விலை குறைந்து 45க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 65ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இஞ்சி ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு 35 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.