ஒலிம்பிக்கில் அசத்திய நீரஜ் சோப்ரா, மனு பாக்கர்..ஈட்டி, பிஸ்டலின் விலை எவ்வளவு தெரியுமா..?
பாரீஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா, மனு பாக்கர் ஆகியோர் ஈட்டி, பிஸ்டலின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11, வரை நடைபெற்றது. இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
அந்த வகையில் இந்தியாவில் இருந்து 117 பேர் கலந்து கொண்டனர். அதில் ,நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கத்தை பெற்று ஒலிம்பிக்கில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
ஈட்டி, பிஸ்டலின் விலை
அதேபோல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலம் வென்ற அவர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா, மனு பாக்கர் ஆகியோர் ஈட்டி, பிஸ்டலின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நீரஜ் சோப்ராவின் ஈட்டி 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. மனு பாக்கர், மோரினி CM 162EI என்ற துப்பாக்கியைப் பயன்படுத்துகிறார். இதன் மதிப்பு சுமார் ரூ. 1,60,000 என்று கூறப்படுகிறது.