எம்-சாண்ட், பி.சாண்டு அதிரடி விலை குறைப்பு - அரசு சொன்ன குட்நியூஸ்

Governor of Tamil Nadu
By Sumathi Apr 28, 2025 05:24 AM GMT
Report

எம்.சாண்டு, பி-சாண்டு விலையை ரூ.1,000 குறைத்து விற்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எம்.சாண்ட் - பி. சாண்ட் 

கட்டுமானத்துக்கு தேவையான எம்.சாண்ட் விலை மட்டும் கடந்த 8 மாதங்களில் 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீடு கட்டுவதற்கான செலவு என்பது 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

M sand

யூனிட் ஜல்லி விலை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம்.சாண்ட் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாகவும், பி.சாண்ட் விலை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், கல்குவாரி, கிரஷர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் 25.04.2025 நாளிட்ட மனுவில் தெரிவித்துள்ள கோரிக்கைகள் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

வார முதலிலேயே சரமாரி சரிவில் தங்கம் விலை - எவ்வளவு பாருங்க

வார முதலிலேயே சரமாரி சரிவில் தங்கம் விலை - எவ்வளவு பாருங்க

விலை குறைவு  

இக்கூட்டத்தில் மனுவில் குறிப்பிட்டுள்ள பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி, கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் எம்-சாண்டு, பி-சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்படட விலையிலிருந்து ரூ.1,000/- குறைத்து விற்பனை செய்யப்படும்.

tn govt

சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33/- என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான அரசாணை ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.