உச்சத்திலேயே தொடரும் தங்கம் விலை; என்ன காரணம் - எப்போது குறையும்?
அடுத்த சில நாட்களில் தங்கம் விலை வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் உயர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரிகளையும் விதித்துள்ளார்.
சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் முதல் 3 இடங்களை வகிக்கின்றன. அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிக்கப்பட்டுள்ளது.
எகிறும் முதலீடு
டிரம்ப்பின் இந்த முடிவு இந்தியாவின் எஃகு ஏற்றுமதியை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்கா வங்கிகள் வட்டி மதிப்பை குறைந்துள்ளன. இதனால் டாலர் மதிப்பு மேலும் குறையும். இதனால் தங்கத்தின் விலை உயரும்.
ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $2,692.39 ஆக உயர்ந்தது. பாதுகாப்பான ரியல் பணம் தங்கம். எனவே, மக்கள் இதில் முதலீடு செய்வதால் தங்கத்தின் மதிப்பு உயரும். இதன் மூலம் வரும் நாட்களில் தங்கத்தின் விலை உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.