ஆயுத பூஜை: பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு!

Chennai Madurai Festival
By Sumathi Oct 03, 2022 07:10 AM GMT
Report

ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்களின் விலை அதிரடியாக இரு மடங்கு உயர்ந்துள்ளது.

ஆயுதபூஜை

சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு, மதுரை, வேலூர், ஓசூர், சேலம், திண்டுக்கல், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் இருந்து, தினமும் லாரிகளில், மல்லி, சாமந்தி, முல்லை என பல வகையான பூக்கள் வருகின்றன.

ஆயுத பூஜை: பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு! | Price Of Flowers In Chennai Festival

இந்நிலையில், ஆயுத பூஜை மற்றும் வரத்து குறைவு காரணமாக பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று காலை ஒரு கிலோ மல்லி ரூ.900, ஜாதி மல்லி** ரூ.360, முல்லை ரூ.750, கனகாம்புரம் ரூ.600, சாமந்தி ரூ.240 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

பூக்களின் விலை

இந்நிலையில், இன்று மல்லிகை கிலோ ரூ.1,000 முதல் ரூ.1200 வரை விற்பனை செய்யப்படுகிறது. பிச்சி ரூ.800-க்கும், முல்லை ரூ.900-க்கும், அரளி ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும், செண்டு பூ, மரிக்கொழுந்து ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆயுத பூஜை: பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு! | Price Of Flowers In Chennai Festival

ஆயத பூஜையை முன்னிட்டு மதுரை மார்க்கெட்டுகளில் ஆப்பிள், கொய்யா, மாதுளை, பேரிக்காய் உள்ளிட்ட பழ வகைகள் ரூ.20 முதல் ரூ.50 வரை அதிகரித்துள்ளன.

இதே போல் வாழைக்கு இலை, வாழைக்கன்று, தேங்காய், அவல், பொரி உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் அமோகமாக உள்ளது.