ஜனாதிபதி திரௌபதி மர்மு பேசிக்கொண்டிருக்கும் போதே மின்வெட்டு - நிகழ்ச்சியில் பரபரப்பு!
ஒடிசா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு ஜனாதிபதி பேசும்போது மின்வெட்டு ஏற்பட்டதால் சர்ச்சையாகியுள்ளது.
பட்டமளிப்பு விழா
ஒடிசா மாநிலம், பாரிபாதாவில் உள்ள மஹாராஜ ஸ்ரீராம் சந்திர பஞ்சா தியோ பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

அதில் அவர் உரையை தொடங்கினர், அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே மின்வெட்டு ஏற்பட்டது. ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் அவரது உரையை முடித்தார். சரியாக 11.56க்கு ஏற்பட்ட மின்தடை 12.05 வரை நீடித்தது, ஜெனரேட்டர்களும் வேலை செய்யாததால் மின்தடை சுமார் 9 நிமிடங்கள் வரை நீடித்தது.
எலெக்ட்ரீசியன் பணி நீக்கம்
இதனை தொடர்ந்து, பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பேசினார். அவர் மின் தடை ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், அப்பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரீசியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் தீபக் மிஸ்ரா என்பவர், “திருமணம் போன்ற சமூக நிகழ்ச்சிகளின் போது மின்தடை ஏற்பட்டால் சில நொடிகளில் மின்சாரம் சீராகிவிடும்.
ஆனால் இங்கு இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்திய குடியரசுத் தலைவர் 10 நிமிடங்களுக்கு மேல் இருளில் இருக்க வேண்டியுள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவருக்குக் கூட தடையில்லா மின்சாரம் வழங்க முடியாது என்றால், சாதாரண மக்களுக்கும் எப்படி வழங்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.