விஜயகாந்திற்கு பத்ம பூஷன் - 132 பேருக்கு பத்ம விருதுகள் - குடியரசு தலைவர் கௌரவம்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருதுகள்
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் நாட்டின் பத்ம விருதுகள் வழங்கப்படும். குடியரசு தலைவர் அளிக்கும் இவ்விருதுகள் சமூக பணி, அரசியல், விளையாட்டு, கலை, சினிமா, அறிவியல் என பல பிரிவுகளையும் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான பத்ம விருது குடியரசு தினத்தில் அறிவிக்கப்பட்டது. 5 பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் என்ற பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்,முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு போன்றோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
இன்று பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் அமைந்திருக்கும் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், cபிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் ஷா போன்றோர் கலந்துக்கொண்டனர்.
பிரபல தெலுங்கு பட நடிகர் சிரஞ்சீவி மற்றும் தமிழகத்தை சேர்ந்த நடன கலைஞர் பத்ம சுப்ரமண்யம் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.