எது வந்தாலும் சமாளிக்கத் தயார் நிலையில் உள்ளோம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
எது வந்தாலும் சமாளிக்கத் தயார் நிலையில் உள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கனமழை
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள அவசரக்கால செயல்பாடுகள் மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இரண்டு நாட்களாக மாவட்ட ஆட்சித் தலைவர்களோடு ஆய்வுக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று இருக்கிறது.
எது வந்தாலும் அதைச் சமாளிக்கக்கூடிய அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து பேசியவர் மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். எது வந்தாலும் சமாளிக்கக்கூடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அணைகள், ஏரிகள் திறப்பு குறித்து மக்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்படுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.