GOAT படத்தில் யாரும் எதிர்பார்க்காத விஜய்யின் அரசியல் - பிரேம்ஜி பகிர்ந்த சீக்ரெட்
GOAT படத்தில் விஜய்யின் அரசியல் தொடர்பான சுவாரஸ்ய தகவலை பிரேம்ஜி பகிர்ந்துள்ளார்.
GOAT
நடிகர் விஜய் நடித்துள்ள GOAT படம் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் இசையமைத்துள்ள இந்த படத்தில், சினேகா பிரசாந்த், மோகன், பிரபு தேவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். AGS நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
விஜய் அரசியலுக்கு வந்த பின் வெளியாகும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் இருக்குமா என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பிரேம்ஜி
இந்நிலையில் GOAT படம் குறித்து அதில் நடித்துள்ள நடிகர் பிரேம்ஜி சில சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார். நேர்காணலில் பேசிய அவர், "படம் ஆரம்பித்த முதல் நிமிடத்திலே சர்ப்பிரைஸ்கள் துவங்கிவிடும். 2 நிமிடத்திற்கு ஒரு முறை விசில் அடிப்பீர்கள். நீங்கள் எதிர்பாராத விஷயங்கள் படத்தில் நிறைய உள்ளன.
மங்காத்தா பட வெற்றியின்போது விஜய் எங்களை அழைத்து அவர் வீட்டில் பார்ட்டி கொடுத்தார். அப்போது உங்களுடன் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என சொன்னேன். அதற்கு "நீ தல ஆளுன்னு எனக்கு தெரியும். நீ என்னோட படத்துக்கு மியூசிக் பண்ணு" என்று விஜய் சொன்னார். அவர் சொன்னது போலவேகோட் படத்தில் நான் ஒரு ரீமிக்ஸ் பாடலுக்கு இசையமைத்திருக்கிறேன்.
நான் சினேகாவின் தம்பியாக நடித்திருக்கிறேன். அப்பா விஜய் எனக்கு மாமா. அதே போல் மகன் விஜய் என்னை மாமா என்று அழைப்பார். படத்தில் குறைவான காட்சிகளில் நடித்திருந்தாலும் இரண்டு விஜய்யுடனும் நடித்திருக்கிறேன்.
விஜய்யின் அரசியல்
படத்தில் விஜய்யின் கார் எண் CM 2026. அந்த காருக்குள் நானும் விஜய்யும் இருப்போம்" என கூறியுள்ளார்.
அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள விஜய், கோட் படத்திற்கு அடுத்து இன்னொரு படத்தில் நடித்து விட்டு, படம் நடிப்பதை நிறுத்தி விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். கட்சி ஆரம்பித்த பின் நடைபெற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாத விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரேம்ஜியின் இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதோடு, விஜய் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவார் என யூகங்கள் பரவி வரும் நிலையில் CM 2026 என்ற குறியீட்டின் மூலம், தான் 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என விஜய் தெரிவித்துள்ளார்.