யாருக்கும் பாரமா இருக்க விரும்பல! 'பிரேமம்' பட இயக்குநர் விபரீத முடிவு..!

Cinema Lead Kerala
By Jiyath Oct 30, 2023 09:54 AM GMT
Report

இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பின்னர் நீக்கிய பதிவொன்று ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அல்போன்ஸ் புத்ரன்

'நேரம்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். இவர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களை இயக்கியுள்ளார். நடிகர் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா இனைந்து நடித்த அந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

யாருக்கும் பாரமா இருக்க விரும்பல!

இதனால் முதல் படமே இயக்குநர் அல்போன்ஸ் புத்ரனுக்கு வெற்றியாக அமைந்தது. இதனையடுத்து 'பிரேமம்' என்ற படத்தை இயக்கினார். அந்த படம் அனைத்து ரசிகர்களின் மனதையும் கவர்ந்தது. இன்றளவும் பேசப்படும் படமாக பிரேமம் உள்ளது.

தொடர்ந்து அவியல், கோல்ட் உள்ளிட்ட படங்களை இயக்கினார். தற்போது கிஃப்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அல்போன்ஸ் புத்ரன் 'தான் சினிமாவிலிருந்து விலகுகிறேன்' என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பின்னர் அதனை நீக்கியுள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leo: லிப்லாக்க அவர் என்ஜாய் பண்ணாரு; முடித்துவிட்டு சொன்ன அந்த வார்த்தை - ஒளிப்பதிவாளர் பேட்டி!

Leo: லிப்லாக்க அவர் என்ஜாய் பண்ணாரு; முடித்துவிட்டு சொன்ன அந்த வார்த்தை - ஒளிப்பதிவாளர் பேட்டி!

அதிர்ச்சி பதிவு

ஆனால் அந்த பதிவின் ஸ்க்ரீன்ஷாட்டுகள் தற்போது வைரலாகி வருகிறது. அவர் பதிவிட்டதாவது " திரையரங்குகளுக்காக படக்கள் இயக்குவதை நிறுத்துகிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு உள்ளது, அதை நான் நேற்று கண்டுபிடித்தேன்.

யாருக்கும் பாரமா இருக்க விரும்பல!

நான் வேறு யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் தொடர்ந்து பாடல்கள்,வீடியோக்கள், குறும்படங்கள் மற்றும் அதிகபட்சம் ஓடிடி-க்காக இயக்குவேன். நான் சினிமாவை விட்டு விலக விரும்பவில்லை, ஆனால் வேறு வழியில்லை. என்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நான் கொடுக்க விரும்பவில்லை.

உடல்நலம் பலவீனமாக இருக்கும்போது அல்லது கணிக்க முடியாத வாழ்க்கை இடைவேளை பஞ்ச் போன்ற ஒரு திருப்பத்தைக் கொண்டுவருகிறது" என்று பதிவிட்டார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அந்த பதிவை சற்று நேரத்தில் நீக்கிவிட்டார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.