Leo: லிப்லாக்க அவர் என்ஜாய் பண்ணாரு; முடித்துவிட்டு சொன்ன அந்த வார்த்தை - ஒளிப்பதிவாளர் பேட்டி!
லியோ படத்தில் விஜய்க்கும், திரிஷாவுக்கும் இடையேயான லிப்லாக் சீன் குறித்து அப்படத்தின் ஒளிப்பதிவாளர் பேசியுள்ளார்.
லியோ திரைப்படம்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் லியோ. இந்த படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலி கான் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த 19ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆனால் வசூல் ரீதியாக படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. வெளியான முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.461 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில், முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை ‘லியோ’ படைத்துள்ளது.
ஒளிப்பதிவாளர் பேட்டி
இந்த படத்தில் விஜய்க்கும், திரிஷாவுக்கும் இடையேயான லிப்லாக் சீன் ஒன்று இடம்பெற்றிருக்கும். இதற்கு பல கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த லிப்லாக் சீன் குறித்து லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒரு நேர்காணலில் பேசியதாவது "அது வழக்கமான கிஸ்ஸாக இருக்கக் கூடாது என்பதற்காக அதை silhouette frame ஆக எடுத்தோம்.
அந்த silhouette-ஐ லோகேஷ் மிகவும் என்ஜாய் பண்ணினார். லோகேஷ் மானிட்டரை பார்த்து விட்டு என்னிடம் "பயங்கரமா இருக்கே, இந்த ஷாட் எல்லாம் கட் பண்ணாம் இப்படியே வச்சுறலாம் போலயே" என்று சொன்னார்.
இந்த ஷாட்டை ஒரு 6 நிமிடத்தில் முடித்துவிட்டோம். எல்லா இயக்குநர்களும் ஷாட்டை முடித்துவிட்டு கட் என்று சொல்லுவார்கள். ஆனால் அந்த ஷாட்டின் சந்தோஷத்தில் லோகேஷ் பேக்அப் என்று சொன்னார்" என்று மனோஜ் பரமஹம்சா பேசியுள்ளார்.