Sunday, May 11, 2025

100 பழங்குடியின மக்களுடன் ஐநாக்ஸில் படம் பார்த்த பிரேமலதா விஜயகாந்த் - நெகிழ்ச்சி!

Vijayakanth Yaathisai
By Vinothini 2 years ago
Report

 பழங்குடியின மக்களை அழைத்து சென்று பிரேமலதா விஜயகாந்த் ஐநாக்ஸ் தியேட்டரில் படம் பார்த்துள்ளார்.

ரோகிணி தியேட்டர் சம்பவம்

சென்னை, ரோகிணி தியேட்டரில் நடிகர் சிம்பு நடித்த பத்துதல படத்தை பார்ப்பதற்காக டிக்கெட் உடன் ஆசையாக காத்திருந்த நரிக்குறவ மக்களை தியேட்டருக்குள் அனுமதிக்காத சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

premalatha-vijayakanth-with-tribals-yaathisai

மேலும், வாரிசு படம் பார்ப்பதற்காக வந்த நரிக்குறவ பெண்ணையும் பார்க்கவிடாமல் தடுத்த சம்பவமும் சர்ச்சைக்குள்ளானது.

பிரேமலதா விஜயகாந்த்

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி, 100 பழங்குடியின மக்களை அழைத்து சென்று ஐநாக்ஸ் தியேட்டரில் யாத்திசை படத்தை கண்டு களித்தனர். அத்துடன் தனது மகன்கள் சண்முக பாண்டியன் மற்றும் பிரபாகரன் ஆகியோ ரையும் அழைத்துச் சென்றுள்ளார்.

premalatha-vijayakanth-with-tribals-yaathisai

இதனால், அந்த மக்கள் இவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். தொடர்ந்து, அவர் படம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த போது யாத்திசை திரைப்படம் மிகவும் அருமையாக உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு இந்த படத்துக்கு கண்டிப்பாக விருது கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளார்.