எடப்பாடி பழனிசாமி மீது திருட்டு வழக்கு .. இது வெட்கக்கேடு : கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்

ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Mar 14, 2023 04:29 AM GMT
Report

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி மீது வழக்கு

எடப்பாடி பழனிசாமி மீது அமமுக பிரமுகர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனை கண்டித்து அதிமுகவினர் நேற்று மதுரையில் தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து ஆர்ப்பட்டம் நடத்தினர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது செல்ஃபோன் திருட்டு வழக்கு போட்டுள்ளதை தலைகுனிவாகவும் வெட்கக் கேடாகவும் பார்க்கிறேன் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மீது திருட்டு வழக்கு .. இது வெட்கக்கேடு : கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த் | Cellphone Theft Case Against Edappadi Palaniswami

செல்ஃபோன் திருட்டு வழக்கு

சென்னையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த் : எடப்பாடி பழனிசாமி மீது செல்ஃபோன் திருட்டு வழக்கு போடப்பட்டுள்ளது. இதை தலைகுனிவாகவும் வெட்கக்கேடாகவும் பார்க்கிறேன்.

அவர் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர். வழக்கை பதிவு செய்வதற்கு முகாந்திரம் இருக்க வேண்டும் கீழ்த்தரமான அரசு நடக்கிறது என்பதற்கு இது ஒன்றே உதாரணம். செல்ஃபோனை திருடி பிழைக்க வேண்டும் என்று அவருக்கு என்ன வந்தது.

முதலமைச்சராக இருந்தவர் மீது முகாந்திரம் கொண்ட வழக்குகள் பதிந்தால் அது சரி. இதுபோன்ற வழக்கை பதியும் போது அவர்கள் தரத்தை அவர்களே தாழ்த்திக் கொள்கிறார்கள் எனக் கூறினார்.