Friday, May 2, 2025

அதிமுகவுக்கு அதற்கான அவசியமே இல்லை - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami DMDK Premalatha Vijayakanth
By Jiyath 10 months ago
Report

அதிமுகவுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

போராட்டம்

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் 61 பேரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர்.

அதிமுகவுக்கு அதற்கான அவசியமே இல்லை - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு! | Premalatha Vijayakanth Support Admk Protest

இந்நிலையில், இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அங்கு எடப்பாடி பழனிசாமியை சந்திந்து பேசிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில் "கள்ளக்குறிச்சியில் நடந்தது சாதாரண விஷயமா?

இதை நிறுத்திக் கொள்வது அரைவேக்காடு அண்ணாமலைக்கு நல்லது - செல்வப்பெருந்தகை!

இதை நிறுத்திக் கொள்வது அரைவேக்காடு அண்ணாமலைக்கு நல்லது - செல்வப்பெருந்தகை!

தேமுதிக மனு 

இது குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டாமா? இந்த போராட்டம் இதோடு முடிந்து விடாது. நாளை கவர்னரை சந்தித்து தேமுதிக சார்பில் மனு அளிக்க உள்ளோம். கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

அதிமுகவுக்கு அதற்கான அவசியமே இல்லை - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு! | Premalatha Vijayakanth Support Admk Protest

சி.பி.ஐ. விசாரித்தால் தான் உண்மை வெளியே வரும். கள்ளச்சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும். அதிமுகவுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.