சீமான் திடீரென்று அந்நியனாகவும் அம்பியாகவும் மாறுவார்...பிரேமலதா விஜயகாந்த் கிண்டல்!
சீமான் திடீரென்று அந்நியனாகவும் அம்பியாகவும் மாறுவார் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.
பிரேமலதா
திருப்பரங்குன்றத்தில், தேமுதிக தேர்தல் பணிக் குழு செயலாளர் அழகர்சாமி மகன் திருமண நிகழச்சி நடைபெற்றது. அதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் கடக்க வேண்டிய பாதைகள் ஏராளமாக உள்ளன. எங்கள் கட்சியிலேயே தேசியமும், திராவிடமும் உள்ளது. கேப்டன் தமிழை நேசித்தவர்.
சீமான்
தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காமல் சரித்திரம் படைத்தார். தமிழ் மொழியை காப்போம், பிற மொழியை கற்போம் எனக் கூறியவர் கேப்டன். தேசியத்தில் தான் திராவிடமும், திராவிடத்தில் தான் தமிழகமும் உள்ளது.
வாக்குறுதிகளை நிறைவேற்றி நல்ல பெயர் வாங்கினால் மட்டுமே திமுக இருக்க முடியும். தெலுங்கர் குறித்து நடிகை கஸ்தூரி கூறியதற்கு நான் பதில் சொல்லத் தேவை இல்லை. மாநாட்டுக்கு முன்பும்,
பின்பும் விஜய் குறித்து சீமான் பேச்சில் மாற்றம் உள்ளது. அவர் திடீரென்று அந்நியனாகவும், அம்பியாகவும் மாறுவார். இதற்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையில்லை. எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.