தவெகவுடன் கூட்டணி? விஜய்தான் பதில் சொல்லனும் - ஒரே போடுபோட்ட பிரேமலதா

Vijay DMDK Thamizhaga Vetri Kazhagam Premalatha Vijayakanth
By Sumathi Jun 09, 2025 08:30 AM GMT
Report

விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு பிரேமலதா விளக்கமளித்துள்ளார்.

தவெகவுடன் கூட்டணி?

கரூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்திற்கு நாங்கள் வரவேற்பு அளித்தது அரசியல் நாகரீகம்.

vijay - premalatha vijayakanth

234 தொகுதிக்கும் இன்னும் 2 நாட்களில் கூட்டம் நடத்தப்பட்டு, பொறுப்பார்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்ட ஒன்று.

2026 தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி? ராமதாஸ் சூசகம்

2026 தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி? ராமதாஸ் சூசகம்

பிரேமலதா பதில்

ஆனால், அதில் எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை. இந்த விஷயத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுப்பதை விட வாக்குறுதி தான் முக்கியம் என்று எடப்பாடி பழனிசாமி எங்களிடம் தெரிவித்துள்ளார்.

தவெகவுடன் கூட்டணி? விஜய்தான் பதில் சொல்லனும் - ஒரே போடுபோட்ட பிரேமலதா | Premalatha Vijayakanth About Allaince With Vijay

2026-ல் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, இந்தக் கேள்விக்கு விடையை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்.

அதற்கு அவர் தான் பதில் சொல்லவேண்டும். 2026-ல் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான். அப்போதுதான் தப்பு நடந்தால் ஒரு எதிர்க்கட்சியாக இருந்து சுட்டி காட்ட முடியும் எனத் தெரிவித்துள்ளார்.