அதிமுக - பாஜக இரு கட்சிகளும் கூட்டணிக்கு பேசினார்கள் - பிரேமலதா விஜயகாந்த்

Vijayakanth Tamil nadu ADMK BJP
By Karthick Mar 08, 2024 11:54 AM GMT
Report

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

தேமுதிக 

தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக அதிமுக வலுவான அணியை அமைக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

premalatha-vijayakanth-about-allaince-with-admk

சில தினங்கள் முன்பு, அதிமுக - தேமுதிக கூட்டணி அமைந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியான நிலையில், இன்று தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக ..? முடிவெடுப்பதாரா பிரேமலதா..?

அதிமுக கூட்டணியில் தேமுதிக ..? முடிவெடுப்பதாரா பிரேமலதா..?

அப்போது அவர் பேசியது வருமாறு,

பிரேமலதா விஜயகாந்த்

தங்களது தேர்தல் குழு அதிமுக தலைமை அலுவலகம் சென்று முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

மாநிலங்களவை தொகுதி கேட்பது எங்கள் உரிமை - எங்கள் கடமை. மாநிலங்களவை சீட் கொடுக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்படாத செய்தி.

premalatha-vijayakanth-about-allaince-with-admk

தேமுதிகவிடம் அதிமுக - பாஜக என இருதரப்பிலும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம்.

வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். பாஜகவுடன் திரைமறைவு பேச்சுவார்த்தை என ஒன்றுமில்லை. கூட்டணி இருந்தால் அறிவிப்போம்.  

இவ்வாறு பிரேமலதா பேசியுள்ளார்.