தேர்தலில் அது நடந்தால் விஜயபிரபாகரனுக்கு திருமணம் - பிரேமலதா
தேர்தல் நெருங்கியிருக்கும் சூழலில், பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
விஜயபிரபாகரன்
மறைந்த தேமுதிக தலைவரின் மகன் விஜயபிரபாகரன், மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் போட்டியிடும் அவர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றார்.
விருதுநகர் தொகுதி பெரும் சவாலான ஒன்று. காங்கிரஸ் சார்பில் 2 முறை மக்களவை உறுப்பினராக இருந்த மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார். அதே போல, பாஜக சார்பில் நட்சத்திர வேட்பாளராக ராதிகா சரத்குமார் களமிறங்குகிறார்.
தேர்தலுக்கு பிறகு....
விஜயபிரபாகரன் தீவிர பரப்புரையில் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஈடுபட்டு வருகின்றார். அவருக்கு ஆதரவாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்ட போது பேசியது வருமாறு, கேப்டன் வாழ்க்கை எல்லாமே இந்த விருதுநகர் தான்.
கணவன் இல்லை என்றால் ஒரு பெண் எவ்வளவு பிரச்னைகளையும்,எவ்வளவு சவால்களையும் எதிர்கொள்வார் என்பது தாய்மார்களுக்கு தெரியும். கேப்டன் விட்டுச்சென்ற பணிகளை உங்களுக்கு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மகனை போட்டியிட வைத்துள்ளேன்.
விஜய பிரபாகரனுக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. விஜயகாந்த் விருதாச்சலம் எப்படி முதல் வெற்றி பெற்றாரோ, அதே போல் விஜய பிரபாகரனுக்கு இந்த விருதுநகர் தொகுதி வெற்றியை தர வேண்டும்.
வெற்றி பெற்ற பிறகு இந்த விருதுநகர் தொகுதி மக்களின் ஆசிர்வாதத்துடன்தான் அவருக்கு திருமணம் நடக்கும்.