அதிமுகவுடன் கூட்டணி? செக் வைத்த பிரேமலதா - நன்றி கூறி திமுகவுடன் நெருக்கம்!
அதிமுகவுடன் கூட்டணி குறித்து அடுத்தாண்டு தெரிவிக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி?
தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. திமுகவில் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவி வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

இதற்கிடையில், அதிமுக, தேமுதிக கூட்டணி வைத்த நிலையில் மாநிலங்களவை சீட் தருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்ததாக கூறியிருந்தார். இந்நிலையில், அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவுக்கு அடுத்த ராஜ்ய சபா தேர்தலில் இடம் வழங்கப்படும். அவர்களுடன் கூட்டணி தொடருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தொடர்வோமா? என்பதை அடுத்தாண்டு ஜனவரி கடலூர் மாநாட்டில் அறிவிப்போம்.
பிரேமலதா செக்
2026 தேர்தலை ஒட்டி மாநிலங்களவை சீட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே அந்த தேர்தலை ஒட்டிதான் எங்களின் அரசியல் நகர்வு இருக்கும். தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் என 2024ல் கையெழுத்து போட்டு கொடுத்தார்கள் அப்போதே, ஒப்பந்தம் போடும் போது, எந்த ஆண்டில் என அதில் குறிப்பிடப்படவில்லை.

அப்போதே ஆண்டைக் குறிப்பிட்டு அளிக்கத் தெரிவித்தோம். ஆனால், ஆண்டு குறிப்பிட்டு அளிப்பது நடைமுறையில் இல்லை என அதிமுக தெரிவித்தது. திமுக பொதுக்குழுவில் மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அண்ணன் ஸ்டாலினுக்கு நன்றி என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan