எனக்கு இது என்ன கொடுமையோ..? தேர்தல் பிரச்சாரத்தில் திடீரென கண்ணீர் வடித்த பிரேமலதா
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகமெங்கும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
தேமுதிக - அதிமுக கூட்டணி
தேசிய ஜனநாயக கூட்டணியை முறித்து கொண்ட அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், SDPI போன்ற கட்சிகளை கூட்டணியில் இணைத்து கொண்டு தேர்தலை எதிர்கொள்கிறது.
கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு, தேர்தலை சந்திக்கும் தேமுதிக 5 இடங்களில் போட்டியிடுகிறது. அக்கட்சியில் நட்சத்திர வேட்பாளராக விருதுநகரில் களமிறக்கப்பட்டுள்ளார் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன்.
அழுத பிரேமலதா
கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றார். நேற்று பண்ருட்டி பகுதியில் வேட்பாளர் சிவக்கொழுந்தவை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர் பேசும் போதே கண்ணீர் வடித்தார்.
தனக்கு முதன்முறையாக திருமணமான போது தான் வந்த ஊர் பண்ருட்டி தான் என்ற பிரேமலதா, ஆனால் இப்பொது கேப்டன் இல்லாமல் வந்துள்ளது என்ன கொடுமையோ என நெகிழ்ச்சியுடன் பேசினார்.
பிரேமலதா இவ்வாறு கூறவே அவருக்கு ஆதரவு தெரிவித்து அங்கு குழுமியிருந்த தொண்டர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்து தங்களது ஆதரவை கூறினார்.