காலையிலேயே ஓட்டு போட்டுருங்க - இல்லனா கள்ள ஓட்டு தான் குண்டை தூக்கிப்போட்ட பிரேமலதா

Kanchipuram ADMK DMDK Premalatha Vijayakanth
By Karthick Apr 03, 2024 10:42 AM GMT
Report

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

கூட்டணி பிரச்சாரம்

தமிழகத்தில் திமுக கூட்டணியை தீவிரமாக சாடி எதிர் கட்சியான அதிமுக தலைமையில் தேமுதிக, எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் தேமுதிகவிற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

premalatha-asks-to-vote-as-early-as-possible

நட்சத்திர வேட்பாளராக விருதுநகரில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கும் சூழலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். அதன் ஒரு பங்காக அவர் காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கள்ள ஓட்டு

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், கச்சத்தீவு விவகாரத்தில் கலைஞர் மற்றும் இந்திரா காங்கிரஸ் இணைந்து நமது உரிமைகளை தாரை வார்த்து கொடுத்து விட்டார்கள் என குற்றம்சாட்டினார்.

அதிமுக - பாஜக இரு கட்சிகளும் கூட்டணிக்கு பேசினார்கள் - பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக - பாஜக இரு கட்சிகளும் கூட்டணிக்கு பேசினார்கள் - பிரேமலதா விஜயகாந்த்

அன்றிலிருந்து மீனவர்களின் பிரச்சனை தான் என குறிப்பிட்டு, திமுக, காங்கிரஸ், கச்சத்தீவு மட்டுமின்றி மற்றும் காவிரி உரிமையும் விட்டுக் கொடுத்து விட்டார்கள் என சாடினார். வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நாள் அன்று காலையிலே சென்று வாக்களித்து விடுங்கள் என கேட்டுக்கொண்ட பிரேமலதா,

premalatha-asks-to-vote-as-early-as-possible

இல்லையென்றால் உங்கள் வாக்கு கள்ள ஓட்டாக மாறிவிடும் என்று கூறி, ஆட்சி பலம் அதிகார பலம் பணபலம் வைத்து சட்ட - ஒழுங்கு சீர்கேடு உருவாக்கி திமுக எல்லா தொகுதியிலும் ஜெயிக்க அனைத்து வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட விட தயாராக இருக்கிறார்கள் என தெரிவித்தார்.