இந்த 2 கண்டிஷன் இருக்கு - சரி'னா கூட்டணிக்கு தயார்...கராராக இருக்கும் பிரேமலதா..?
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக இன்னும் கூட்டணியை உறுதிசெய்யவில்லை.
நாடாளுமன்ற தேர்தல்
இன்னும் 2 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது. நாட்டில் பல கட்சிகள் தேர்தல் கூட்டணிகள், தொகுதி பங்கீடுகள் என மும்முரம் காட்டி வருகின்றன.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை துவங்கி விட்ட நிலையில், அதிமுகவின் கூட்டணிக்கு இன்னும் பெரிய கட்சிகள் இசையவில்லை. அதே நேரத்தில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மரணம் அக்கட்சிக்கு ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்டிஷன்
ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து இன்னும் தேமுதிகவும் இறுதி முடிவை எட்டவில்லை. அதிமுக அல்லது பாஜக கூட்டணிக்கு தான் தேமுதிக செல்லும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், கூட்டணிக்கு அக்கட்சி முன்வைத்துள்ள நிபந்தனை குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதாவது, 1 மாநிலங்களவை - ராஜ்ய சபா சீட், 4 மக்களவை சீட் - லோக் சபா சீட் கேட்கும் முடிவில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.