அதெல்லாம் சஸ்பென்ஸ்..!! திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வரும் - ஜெயக்குமார் அதிரடி
திமுகவின் கூட்டணியில் இருந்து பல கட்சிகள் அதிமுகவின் கூட்டணிக்கு வரவுள்ளதாக ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு
அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று அவரின் திருவுருவ சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணாவின் வழியில் வருவதாக கூறும் திமுக, மாநில உரிமையை தாரைவார்த்து விட்டனர் என்றும் அண்ணாவின் பெயரை சொல்ல திமுகவினருக்கு தகுதி இல்லை என்றார்.
பல கட்சிகள்....
அதிமுக ஏற்கனவே தேர்தல் பணிகளை துவங்கி விட்டதாக தெரிவித்த ஜெயக்குமார், கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் முறையாக அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
மேலும், அவசர அவசரமாக கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக மேற்கொள்ள பயம் தான் காரணம் என்ற அவர், திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வரவுள்ளனர் என்று தெரிவித்தார்.
உள்ளாட்சி முதல் மேல் வரை அனைத்து இடங்களிலும் ஊழல் நிறைந்துவிட்டதாகவும் கடும் விமர்சனத்தை ஜெயக்குமார் முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, முன்னர் தோழமையுடன் இருந்தோம் இப்பொது அவர்கள் எங்களுக்கு எதிரி என்று தடாலடியாக தெரிவித்து சென்றார்.