அரசியல் ஒரு பெருங்கடல்.. விஜய் மூழ்குவாரா, கரை சேர்வாரா என்பதை பார்ப்போம் - ஜெயக்குமார்!
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
தமிழக வெற்றி கழகம்
நடிகர் விஜய் அரசியலில் கால்பதிக்கவுள்ளார் என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களாக வலம் வந்த வண்ணம் இருந்தது. அதனை உண்மையாகும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது கட்சி பெயரையும் அறிவித்துள்ளார் நடிகர் விஜய்.
அதன்படி கட்சியின் பெயர் 'தமிழக வெற்றி கழகம்' என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் போட்டியில்லை என்றும், யாருக்கும் ஆதரவில்லை. அதே நேரத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஜெயக்குமார் கருத்து
இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது "ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கலாம்.
சும்மா 10 பேர் சேர்ந்து கூட கட்சியை ஆரம்பிக்கலாம். அதில் மாறுபட்ட கருத்து கிடையாது. அரசியல் என்பது ஒரு பெருங்கடல்.. அது ஒரு சமுத்திரம் போன்றது.
அந்த சமுத்திரத்தில் நீந்திக் கரைசேரும் நபர்களும் உண்டு.. மூழ்கியும் போவார்கள். எனவே, இப்போது அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய் மூழ்கிப் போகிறாரா அல்லது நீந்திக் கரை சேர்கிறாரா என்பதைத் தேர்தலில் தான் பார்க்க வேண்டும்" என்றார்