விஜய்காந்த் மேல ஏன் இப்படி வன்மம்; மகன்களுக்கு திருமணம்? கண்ணீருடன் பிரேமலதா!
விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவரது மனைவி பிரேமலதா சில முக்கிய தகவல்கள் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகிறது.
அவரதுஉடல்நிலை குறித்து இணையத்தில் பலவித வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசி்யுள்ள பிரேமலதா, "நீங்கள் யாரும் விஜயகாந்த் உடன் இருப்பதில்லை. நான் மட்டுமே அவருடன் இருந்து வருகிறேன்.
பிரேமலதா வேதனை
அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்துத் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனாலும், சிலர் தொடர்ந்து வதந்தி பரப்பி வருகிறார்கள். கேப்டன் மீது அப்படி என்ன வன்மம் என்று எனக்கு புரியவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார். திருமணமே ஆகாத எங்கள் இரு பிள்ளைகளுக்குத் திருமணம் நடந்துவிட்டதாகச் சொல்கிறீர்கள்.
நன்றாக இருக்கும் விஜயகாந்த் குறித்து கேவலமான தகவல்களைப் பரப்புகிறீர்கள்.
தயவு செய்து இனிமேலாவது கேப்டன் விஜயகாந்த் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம்.
இன்னும் 2, 3 நாட்களில் வீடு திரும்புவார்" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.