அறையில் கர்ப்பிணிகளை டாக்டர்கள் செக்கப் செய்யும் காட்சி - கசிந்த வீடியோக்கள்!
அறைக்குள் கர்ப்பிணிகளை பெண் டாக்டர்கள் பரிசோதிப்பது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
மெடிக்கல் செக்கப்
குஜராத்தில் பிரபல பயல் என்ற மகப்பேறு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான கர்ப்பிணிகள் இங்குதான் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், தனி அறையில் கர்ப்பிணிகளை டாக்டர்கள் பரிசோதிக்கும் வீடியோக்களும், நர்ஸ்கள் அவர்களுக்கு தரும் சிகிச்சைகளும், வீடியோவாக வெளியாகியுள்ளது. பல வீடியோக்கள் யூடியூப் மற்றும் டெலிகிராம் சேனல்களில் அப்லோடு செய்யப்பட்டுள்ளன.
வீடியோவால் அதிர்ச்சி
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மருத்துவமனை இயக்குநர் கூறுகையில், "மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகள் எப்படி வெளியானது என்று தனக்கு தெரியவில்லை.
சிசிடிவி சர்வர் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது. ஆனாலும், இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து புகார் தரப்போகிறோம்" எனத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வீடியோக்களை பார்ப்பதற்கு, டெலிகிராம் குழுவின் உறுப்பினர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சந்தாக்களை செலுத்த வேண்டும் என்பதற்காக, உறுப்பினர்களை ஈர்க்கவே, இதே போன்ற வீடியோக்களின் ஸ்கிரீன் கிராப்கள் ஷேர் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.