ஆசைப்பட்டு தயிர்ப்பூரி வங்கிய கர்ப்பிணி பெண் - இப்படி ஒரு கொடுமையா நடக்கணும்!
சென்னையில் ஒரு கர்ப்பிணி பெண் தயிர்ப்பூரி வாங்கியதால் அவருக்கு நேர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாட் சிப்ஸ் கடை
சென்னை பாண்டி பஜார் பகுதியில், ஹாட் சிப்ஸ் கடை உள்ளது. அங்கு கொரட்டூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண் நித்யா தயிர் பூரி கேட்டுள்ளார். அப்பொழுது அவருக்கு அளிக்கப்பட்ட தயிர் பூரியில் கரப்பான் பூச்சி இறந்துகிடந்துள்ளது.
அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் குடும்பனத்தினர். அந்த கடையின் மேலாளரிடம் சென்று கேட்டபொழுது அவர் அலட்சியமாக நடந்துள்ளார். பின்னர் அதனை உண்டதால் அந்த பெண் வாந்தி எடுத்துள்ளார், அதனால் அவரை சிகிசைக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
உணவு பாதுகாப்பு துறை
இந்நிலையில், அந்த பெண்ணின் குடும்பத்தினர் உணவு பாதுகாப்பு துறைக்கு புகாரளித்துள்ளனர். தொடர்ந்து, அந்த கடையில் ஆய்வு நடத்திய அதிகாரி, "உணவில் கிடந்த கரப்பான்பூச்சி இல்லை. மின் விளக்கு ஒளியில் வரும் பூச்சி தான்.
சமையலறை பகுதி தூய்மையாக பராமரிக்கப்படவில்லை, சமையல் பொருட்கள் முறையாக மூடி வைக்கவில்லை என்று தெரிகிறது" என்று கூறியுள்ளனர். பின்னர், அந்த கடையில் விதிமுறைகளை சரியாக பின்பற்றாததால் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.