வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவன்; நிற்காத ரத்தபோக்கு - பறிப்போன உயிர்!

Death Dharmapuri
By Sumathi Aug 23, 2023 03:38 AM GMT
Report

வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் பிரசவம்

தருமபுரி, அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மாதேஷ் (30)- லோகநாயகி தம்பதி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. லோகநாயகி சிறு வயதில் இருந்தே தனது தோட்டத்தில்

வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவன்; நிற்காத ரத்தபோக்கு - பறிப்போன உயிர்! | Pregnant Woman Died During Delivery Dharmapuri

இயற்கை முறையில் விளைந்த நெல், காய்கறிகளை மட்டும் உண்டு வந்துள்ளார். திருமணத்தில் கூட இயற்கை முறையில் விளைவித்த நெல்லில் கிடைத்த அரிசு மூலம் உணவு தயாரித்து அனைவருக்கும் பரிமாறப்பட்டதாம்.

மனைவி உயிரிழப்பு

அதன்பின் லோகநாயகி கர்ப்பமாகியுள்ளார். மேலும், கணவன், மனைவி இருவரும் இயற்கை முறையில் குழந்தையை பிரசவிக்க முடிவு செய்தனர். இந்நிலையில், லோகநாயகிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவன்; நிற்காத ரத்தபோக்கு - பறிப்போன உயிர்! | Pregnant Woman Died During Delivery Dharmapuri

இதையடுத்து, கணவர் பிரசவம் பார்த்துள்ளார். அதில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் நச்சுக்கொடி வெளியே வராமல் ரத்தப்போக்கு ஏற்பட்டது. திடீரென வலிப்பும் ஏற்பட்டுள்ளது.

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதித்ததில் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.