ஓடும் பஸ்ஸில் மனைவியை மிதித்த கணவன் - கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்!
கர்ப்பிணி மனைவியை, கணவன் பேருந்திலிருந்து தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் வாக்குவாதம்
திண்டுக்கல், ஒத்தக்கடை பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன்(24). தனியார் குடோனில் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வளர்மதி. கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது.
தற்போது வளர்மதி 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் தாய் வீட்டிற்கு தனது கணவனுடன் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த பாண்டியன் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
கர்ப்பிணி பலி
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பாண்டியன் கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்த மனைவி உயிரிழந்தார். தொடர்ந்து, பாண்டியனை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாமனாரின் இருசக்கர வாகனத்தை தரவேண்டி பாண்டியன் மனைவியிடம் சண்டையிட்டது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.