நிறைமாத கர்ப்பிணி தற்கொலை - கொடுமை படுத்தி கதறிய கணவர்!
வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
வரதட்சணை கொடுமை
சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் கிரண் குமார் (25). இவர் எலக்ட்ரிசீயன், இவரது மனைவி மணிமேகலை (25). இவர்களுக்கு தக்சீத்(4) என்ற மகன் உள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில்,மணிமேகலை ஒன்பது மாதம் கர்ப்பிணியாக இருந்தார். தொடர்ந்து, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வேலைக்கு சென்று திரும்பிய கணவர் வெகுநேரமாக வீட்டின் கதவை தட்டியும் திறக்கவில்லை.
கர்ப்பிணி தற்கொலை
இதனால் அதிர்ச்சியடைந்த கிரண் குமார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மனைவி தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். அதனைப் பார்த்த கணவர் கதறி அழுதுள்ளார். அதன்பின் தகவல் அறிந்து வந்த போலீஸார் உடலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததில் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது தெரியவந்தது.
அதனையடுத்து, திருமணமாகி 5 ஆண்டுகள் ஆனதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில், வரதட்சணை கேட்டு மணிமேகலையை கொடுமை படுத்தியது தெரிந்தது. அதன் அடிப்படையில் கணவரை கைது செய்துள்ளனர்.