வரதட்சணை கொடுமையால் இந்தமாநிலத்தில்தான் அதிக இறப்புகள் : வெளியான அதிர்ச்சி சர்வே

Crime
By Irumporai Dec 16, 2022 08:42 AM GMT
Report

வரதட்சணை கொடுமை காரணமாக உத்தரபிரதேசத்தில் மட்டும் 11,874 பேர் உயிரிழப்பு என மத்திய அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

வரதட்சணையால் உயிரிழப்பு

2017 முதல் 2021 வரை இந்தியாவில் 35,493 வரதட்சணை கொடுமை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 35,493-ஆக பதிவாகியுள்ளது என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

உ.பி முதலிடம்

இதில், வரதட்சணை கொடுமை காரணமாக உத்தரபிரதேசத்தில் மட்டும் 11,874 பேர் இறந்துள்ளனர்.

வரதட்சணை கொடுமையால் இந்தமாநிலத்தில்தான் அதிக இறப்புகள் : வெளியான அதிர்ச்சி சர்வே | Deaths Due To Dowry Cruelty Shocking Survey

உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து பீகாரில் 5,354 பேர், மத்தியப் பிரதேசத்தில் 2,859 பேர், மேற்கு வங்கத்தில் 2,389 பேர் மற்றும் ராஜஸ்தானில் 2,244 பேர் வரதட்சணை கொடுமை காரணமாக இறந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இதில் குறிப்பாக மிசோரம் மற்றும் லட்சத்தீவுகள் போன்ற இடங்களில் வரதட்சணை கொடுமை இறப்புகள் ஒன்று கூட பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.