16 வயது கர்ப்பிணி சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற காதலன் - பகீர் பின்னணி
கர்ப்பிணி சிறுமியை காதலன் தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்ப்பிணி சிறுமி
பீகார், ரஜாவ்லி என்ற பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சோனு குமார். இவருக்கும் அங்குள்ள 16 சிறுமி ஒருவருக்கும் ஓராண்டுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து அதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி சோனு குமாரிடம் தெரிவித்து திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதன்பின் சோனு குமார் சிறுமியிடம் பேசுவதை தவிர்க்கத் தொடங்கியுள்ளார். ஆனால், சிறுமி, அவரை விடாமல் துரத்திய நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
எரித்து கொலை
இந்த வாக்குவாதம் முற்றியதில், சோனு குமாரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து அந்த சிறுமியை அவரது பெற்றோர் முன்னிலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சிறுமியின் குடும்பத்தை சிறைபிடித்து அடைத்து வைத்துள்ளனர். தொடர்ந்து சிறுமி உடலை அடக்கம் செய்துள்ளனர்.
அதனையடுத்து, 4 நாட்கள் கழித்து சிறுமியின் தந்தை அங்கிருந்து தப்பிவந்து புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சோனு மற்றும் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.