16 வயது சிறுமி கர்ப்பம்.. குடும்பமே சேர்ந்து செய்த கொடூர செயல் - நடந்தது என்ன!
16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
ஆவடி அடுத்த திருமுல்லவாயல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 16 மற்றும் 14 வயதுடைய இரு மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது வீட்டின் உரிமையாளரான வெங்கடேசன்(34) அருகிலேயே வசித்து வருகிறார்.
இவருக்கு இரண்டு திருமணம் ஆகி இருவரும் பிரிந்து சென்ற நிலையில், தனது மகன், தாய், அக்காவுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவருடைய அக்கா வீட்டில் குடியுள்ள பெண்ணிடன் தனது தம்பிக்கு அவரது மூத்த பெண்ணை திருமணத்திற்கு பெண் கேட்டுள்ளார்.
சிறுமி கர்ப்பம்
ஆனால் இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, வெங்கடேசன் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், அவரது அக்கா தனது ஆண் நண்பர்கள் வெங்கப்பன், கிரி, பாலஜி ஆகிய மூவரிடம் பணம் வாங்கி கொண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கைது
அங்கு மருத்துவர் பரிசோதித்ததில் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதன்பின் தனக்கு நடந்த கொடுமையை சிறுமி தாயிடம் கூறியுள்ளார். உடனே தாய் போலீஸில் புகாரளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் போலீஸார் வெங்கடேசன், தாய் விஜயா, அக்கா லலிதா அவரது நண்பர் வெங்கப்பா ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற நண்பர்களான கிரி, பாலாஜியை தீவிரமாக தேடி வருகின்றனர்.