எருமை மாட்டிற்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் வெறிச்செயல்!

Sexual harassment Maharashtra Crime
By Sumathi Oct 30, 2022 06:52 AM GMT
Report

இளைஞர், எருமை மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பாலியல் வன்கொடுமை

மகாராஷ்டிரா, புனே டெக்கான் பகுதியில் எருமை மாடு ஒன்று மேய்ச்சலில் இருந்துள்ளது. அப்போது அங்கு ஒரு நபர் எருமையை மறைவான இடத்திற்க் ஓட்டிச் சென்றுள்ளார். தொடர்ந்து அதனை இயற்கைக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

எருமை மாட்டிற்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் வெறிச்செயல்! | Maharashtra Man Held For Raping Buffalo Calf

இந்நிலையில், அவ்வழியாக வந்தவர்கள் சிலர் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அதற்கு அந்த நபர் முன்னுக்கு பின் முரனான பதிலை அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

கொடூர சம்பவம்

இதனால் அந்த நபர் பலத்த காயமடைந்துள்ளார். அதன்பின் தகவல் அறிந்து சம்பவம் இடம் வந்த போலீஸார், அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதனையடுத்து அந்த நபரிடம் விசாரித்ததில், அவர் நேபாளத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு வயது 38. உடனே, அந்த நபர் மீது 377 சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.