நெருங்கிய பிரசவ தேதி - கணவருக்கு 1 மாதத்திற்கு தேவையான உணவை ஒரே நாளில் சமைத்த கர்ப்பிணி!
கணவருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவை ஒரே நாளில் கர்ப்பிணி பெண் ஒருவர் சமைத்து வைத்துள்ளார்.
நிறைமாத கர்ப்பிணி
ஜப்பானைச் சேர்ந்த பெண் ஒருவர் 9 மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், இவர் தனது கணவருக்காக, 30 நாட்களுக்கு தேவையான உணவை சமைத்துள்ளார்.
தான் பிரசவத்திற்கு சென்றுவிட்டால், கணவர் வெளியில் சரியாக சாப்பிடமாட்டார் எனக் கூறி கவலை தெரிவித்து சமையல் செய்துள்ளார். மேலும், இதற்கு கவலை தெரிவித்து, அதனை வீடியோவாக எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வைரல் சம்பவம்
அதில், பிரசவத்திற்கு செல்வதற்கு முன்பு, தனது கணவருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவை தயாரித்து, பிரீசரில் சேமித்து வைத்துவிட்டார்.
இதனைப் பார்த்த பலர் பலவிதமான கலவையாக கமெண்டுகளை குவித்து வருகின்றனர். மேலும், கர்ப்பிணி இவ்வாறு வேலை செய்யலாமா? என விமர்சித்தும் வருகின்றனர்.