என் சாதி குழந்தை உன் வயித்துல பிறக்கக்கூடாது - மிரட்டலால் கதறிய நிறைமாத கர்ப்பிணி!

Pregnancy Crime Kallakurichi
By Sumathi Mar 13, 2023 10:20 AM GMT
Report

கர்ப்பிணி பெண்ணுக்கு சாதிய ரீதியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்

கள்ளக்குறிச்சி, தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் கல்பனா. இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் 5 வருடங்களாக காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

என் சாதி குழந்தை உன் வயித்துல பிறக்கக்கூடாது - மிரட்டலால் கதறிய நிறைமாத கர்ப்பிணி! | Caste Untouchability Pregnant Woman Baby Shower

இதில் கல்பனா வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதால் வெங்கடேசனின் உறவினர் செல்வம் என்பவர் தொடர்ந்து சாதியை காரணம் காட்டி அவரை துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் ஏழு மாத கர்ப்பிணியான கல்பனாவிற்கு அதே கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

 கொலை மிரட்டல்

அப்போது கல்பனா வீட்டிற்கு செல்லும் வழியில் செல்ல விடாமல் செல்வம் பெரிய பள்ளம் தோண்டியுள்ளார். அதில் வாக்குவாதல் செய்ததில் ''நீ இங்கு வந்தால் உன்னை கடப்பாரையால் கொன்று புதைத்து விடுவேன் எனவும் அதற்காகத்தான் குழி தோண்டி வைத்துள்ளேன்.

என் சாதி குழந்தை உன் வயித்துல பிறக்கக்கூடாது - மிரட்டலால் கதறிய நிறைமாத கர்ப்பிணி! | Caste Untouchability Pregnant Woman Baby Shower

உன் குழந்தை எங்கள் சாதியில் பிறந்தால் நாங்கள் எல்லோரும் தீட்டாகி விடுவோம் ஒழுங்காக உன் அம்மா வீட்டிற்கு ஓடிவிடு. இல்லையென்றால் உன் வயிற்றில் இருக்கும் குழந்தையை நீயே கொன்றுவிடு. அப்படி செய்யவில்லை என்றால் உன்னை கடப்பாரையால் அடித்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

அதனையடுத்தி இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி வளைகாப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு அப்படியே காவல் நிலையத்திற்கு சென்று சம்பவத்தை கூறி புகாரளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.