முக்கடல் பொங்க போகுது; பிரச்சனையே இனிதான், பூமி மூழ்கும் - பகீர் கிளப்பிய அனுமோகன்!
இயற்கை சீற்றம் குறித்து பிரபல இயக்குநர் பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.
இயற்கை சீற்றம்
கோவையைச் சேர்ந்தவர் டைரக்டரும், நடிகருமான அனுமோகன். இது ஒரு தொடர் கதை, நினைவு சின்னம், மேட்டுப்பட்டி மிராசு, அண்ணன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
மேலும், அர்ச்சனை பூக்கள், விஐபி, மூவேந்தர், நட்புக்காக. மன்னவரு சின்னவரு, படையப்பா, சுயம்வரம், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்த வருடம் பேரழிவு நிச்சயம் வரும். இந்த வருடம் அழிவு வரும் என்று தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கிறேன்.
ஆனால், நானே இதையெல்லாம் கற்பனையில் பேசுவதாக சொல்கிறார்கள். இவை யாவும் சித்தர்கள் அன்றே சொன்னது. சித்தர்கள் எழுதிவைத்ததை, நான் 45 வருடத்துக்கு முன்பு படித்தேன். இதற்கு பிறகு சித்தர்கள் என்னுடைய கனவில் தோன்றி, டைம் நெருங்குது, இதெல்லாம் போயி வெளியே 4 பேருக்கு சொல்லு என்று என்னிடம் சொல்ல சொன்னார்கள்.
அனுமோகன் கருத்து
அரபிக்கடல், வங்கக்கடல், இந்துமகா சமுத்திரம் மூன்று கடலுமே ஒன்றாக பொங்கும். கடலுக்கு கீழே எரிமலை வெடிக்குமாம். அது சுனாமியாக வரும். அப்போது ராவண பூமி கடலில் மூழ்கும் என்று சித்தர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். இப்போது பஞ்சபூதங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு படம் எடுத்திருக்கு.
அதனுடைய டைட்டில் கார்டுகள்தான் இப்போது நடக்கும் மண்சரிவுகள். இதனுடைய மெயின் பிக்சர் இனிமேல்தான் வரப்போகுது. அந்த கிளைமேக்ஸ் நினைச்சு பாருங்க. நிலச்சரிவு, பூகம்பம், சுனாமி, எல்லாமே நடக்கும். மனிதன் இதை சந்தித்தே ஆகணும்.
அதனால் எப்போதும் அரசாங்கத்தை குறை சொல்லியோ, அடுத்தவரை குறை சொல்லியோ பிரயோஜனமில்லை. இயற்கைக்குண்டான மரியாதையை மனிதன் தந்தே ஆகவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.