பல நூற்றாண்டுகளுக்கு முன் இருட்டில் மறைந்த கிராமம்- இன்றுவரை நள்ளிரவில் நடக்கும் அமானுஷ்யம்!
குல்தாரா கிராமத்தில் வசித்த மனிதர்கள் எங்கே சென்றார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மரில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், குல்தாரா என்ற நகரம் உள்ளது. இந்த நகரம் ஒரு காலத்தில் செழிப்பாக இருந்தது, ஆனால் இப்போது கட்டிடங்கள் இடிந்து கிடக்கிறது. மேலும் பல்வேறு திறந்த வீடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
இங்கு வசித்த மனிதர்கள் எங்கே சென்றார்கள்? ஏன் இந்தக் கிராமத்தில் மட்டும் பேய் உலவும் பூமியாக இருக்கிறது என்ற கேள்வி நம் மனதில் எழுந்துள்ளது. ஒரு காலத்தில் இந்த கிராமத்தில் சுமார் 1,500 பிராமணர்கள் வசித்து வந்ததுள்ளனர்.
அப்போது மந்திரவாதி ஒருவரின் சாபத்தால் 85 கிராமங்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களும் ஒரே இரவில் இருட்டில் மறைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் எங்குச் சென்றார்கள் என்று இதுவரை யாருக்கும் தெரியாத புதிர் கதையாக உள்ளது.
பேய்கள்
அதுமட்டுமில்லாமல் கொடுமைக்காரத் தலைவர் சலீம் சிங், பிராமணர் பெண்ணைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் திருமணம் நடக்காத காரணத்தால் கிராம மக்கள் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சலீம் சிங் கிராமத்தை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
திருமணத்தை ஒத்துக்கொள்ளாத கிராம மக்கள் இரவோடு இரவாக வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.அப்போது இந்த கிராமங்களில் யாரும் வசிக்க முடியாது என்று அவர்கள் கிராமத்தைச் சபித்தாக கூறப்படுகிறது.
நாளடைவில் குல்தாரா என்றாலே பேய் கிராமம் என்ற பெயர் நிலைப்பெற்றுவிட்டது. இந்த இடத்தில் தொடர்ந்து நடக்கும் பல விசித்திரமான மற்றும் இயற்கைக்கு மாறான அமானுஷ்ய செயல்கள் மற்றும் பேய் உலாவருவதாக தற்போதுவரை கூறப்படுகிறது.