சிறுமியை வன்கொடுமை செய்த சாமியார்; மெட்ரோவில் விளம்பர போஸ்டர் - வெடித்த சர்ச்சை!
சிறுமியை வன்கொடுமை செய்த சாமியாருக்கு விளம்பர போஸ்டர்கள் ஒட்டியிருந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
குஜராத், அகமதாபாத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன.
அதில் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் கடந்த 2013ல் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2018ல் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயில் பெட்டிகளில் ஆசாராம் பாபுவின் உருவப்படம் கொண்ட விளம்பர ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோவில் போஸ்டர்
இந்த விளம்பர போஸ்டர்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வழக்கறிஞர் ஒருவர், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் விளம்பர போஸ்டர்களை மெட்ரோவில் காட்சிப்படுத்த அனுமதித்திருப்பது டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் [DMRC-யின்] வெட்கக்கேடான செயல் எனக் குறிப்பிட்டிருந்தார்.
Shame @OfficialDMRC
— The Legal Man (@LegalTL) February 6, 2025
How can Delhi Metro allow a criminal who is convicted under RAPE CHARGES, and spending his conviction inside jail, endorse his posters, pics etc inside the Delhi metro rail?
Highly shameful act by #delhimetro pic.twitter.com/qP7ryrvmhp
இதற்கு பதிலளித்துள்ள மெட்ரோ நிர்வாகம், மெட்ரோ வளாகத்திலிருந்து இந்த விளம்பரங்களை விரைவில் அகற்றுமாறு உரிமதாரருக்கு DMRC உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.