விஜயகாந்த் கடைசி வரை அப்படித்தான்..மீட்க முடியாது - பிரபல இயக்குனர் ஷாக் தகவல்
விஜயகாந்த் ஆழ் மனதில் இருக்கும் எண்ணத்தை முதலில் எடுக்க வேண்டும் என ப்ரவீன் காந்தி தெரிவித்துள்ளார்.
ப்ரவீன் காந்தி
இயக்குனரும் நடிகருமான ப்ரவீன் காந்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜயகாந்த் குறித்து சில தகவல்கள் பகிர்ந்துள்ளார். அதில், நட்புக்கு உதாரணம் என்றால் அது ராவுத்தர்-விஜயகாந்த் தான். இப்ராஹிம் ராவுத்தர் இறந்த பின், வடபழனியில் அவருடைய இடத்தில் உடல் வைக்கப்பட்டிருந்தது.
அங்கு வந்து ராவுத்தர் உடலை பார்த்ததுமே, விஜயகாந்த் உடைந்துவிட்டார். தனக்காகவே தன் வாழ்க்கையை தியாகம் பண்ண ராவுத்தர் இறந்ததை அவரால் நம்பமுடியவில்லை. அன்றிலிருந்து தான் அவர் குழம்பிப் போனார். ராவுத்தரின் கடைசி காலத்தில் அவருடன் விஜயகாந்த் நெருக்கமாக இல்லை.
விஜயகாந்த் நிலை
நாம நெருக்கமாக இல்லாததால் ராவுத்தர் போயிட்டானோ என்கிற குற்ற உணர்வு தான், விஜயகாந்த் இப்படி ஆக காரணம். தன் வாழ்க்கையில் தூணாக இருந்தவன் இறக்க, நானும் ஒரு காரணமாக இருந்து விட்டோமே, என்கிற எண்ணம் தான், விஜயகாந்த் ஆழ் மனதை புறட்டி எடுக்கிறது.
இதை வெளியே தூக்கி போடவில்லை என்றால், விஜயகாந்த் சார் கடைசி வரை இப்படி தான் இருப்பார். இதற்கு ஒரே ஒரு வழி தான். ராவுத்தர் மாதிரி இருக்கிற ஒருத்தரை அழைத்து வந்து, ‘ராவுத்தர் சாகவில்லை, உயிரோடு தான் இருக்கிறான்’ என்று அவரை நம்பவைக்க வேண்டும். இது மேல் நாட்டு மனோதத்துவ சிகிச்சை எனக் கூறியுள்ளார்.