அப்பா தான் என் கேரியரை நாசம்பண்ணிட்டாருன்னு..உண்மையை உடைத்த பிரசாந்த்!

Prashanth Tamil Cinema Tamil Actors
By Swetha Jul 31, 2024 01:30 PM GMT
Report

தந்தையால் என் கேரியர் நாசமானதாக சிலர் கூறியதன் பின்னணியை பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த்

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வந்தவர் தான் நடிகர் பிரசாந்த். இவர் அப்போதைய காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தார். இவர் 1990 -ம் ஆண்டு வெளியான "வைகாசி பொறந்தாச்சு" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அப்பா தான் என் கேரியரை நாசம்பண்ணிட்டாருன்னு..உண்மையை உடைத்த பிரசாந்த்! | Prashanth Shares About His Career And Father

இதையடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் சமீப காலமாக திடீரென பட வாய்ப்புகளை இழந்து காணாமல் போனார்.இடைவெளிக்கு பின்னர் பொன்னர் சங்கர் படத்தில் நடித்தார். அது பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

அதன்பின் அந்தகன் படத்தில் நடித்துள்ளார். தற்போது, விஜய் நடிக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அந்தகன் படத்தின் புரோமோஷன் பணியில் பிரசாந்த் தீவிரம் காட்டி வருகிறார். அதில், ஒரு பிரபல ஊடகம் ஒன்றிற்கு கலா மாஸ்டர் எடுத்த பேட்டியில் அவர் பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

2வது திருமணத்திற்கு ரெடியான பிரசாந்த்? பிரபலம் உடைத்த தகவல்!

2வது திருமணத்திற்கு ரெடியான பிரசாந்த்? பிரபலம் உடைத்த தகவல்!

என் கேரியரை..

அதாவது, கலா மாஸ்டர் நீங்கள் நடிக்கும் படத்தின் கதையை கேட்பது நீங்களா அல்ல அப்பாவா என கேட்க, அதற்க்கு பிரஷாந்த் நான் தான் கேட்பேன். சில கதையில் அல்லது கதாபாத்திரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றால், அதை அப்பாவிடம் சொல்லுவேன்.

அப்பா தான் என் கேரியரை நாசம்பண்ணிட்டாருன்னு..உண்மையை உடைத்த பிரசாந்த்! | Prashanth Shares About His Career And Father

அவர் இயக்குனரிடம் "பிரஷாந்துக்கு கதை ஓகே தான் ஆனால் எனக்கு அது சரிப்பட்டு வரும் என தோன்றவில்லை என கூறி தன் மீதே பழியை போட்டு கொள்வார்".இதனால் பிரஷாந்த் நல்லவர்தான் ஆனால் அவரின் கேரியரை கெடுத்தது,

அவரின் தந்தை என கூறி விடுவார்கள். அவரை யார் என்ன சொன்னாலும் அவர் எந்நேரமும் என்னை பற்றியே தான் நினைத்து கொண்டிருப்பார். நினைத்து கொண்டிருக்கிறார் என பிரஷாந்த் தன்னுடைய தந்தை பற்றி இந்த பேட்டியில் கூறியுள்ளார்.