இத்தனை சீட் வெல்லுமா..? தமிழகத்தில் பாஜக வெற்றி..? பிரஷாந்த் கிஷோர் கணிப்பு
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி எம்மாதிரியான தாக்கத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
பாஜக கூட்டணி
அதிமுக இல்லாமல், பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் நிர்பந்தத்தில் உள்ளது.
தொடர்ந்து அதிமுகவின் கூட்டணிக்கு பாஜக தலைமை முயன்று வருவதாக கருத்துக்கள் வெளிவரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கூட்டணி,இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.
பாமக, தேமுதிக, த.மா.கா போன்ற கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு வரவழைக்க பாஜக முயன்று வருகின்றது. ஆனால், இன்னும் கூட்டணி இறுதி கட்டத்தை எட்டவில்லை.
இரட்டை இலக்க..
இந்நிலையில் தான், பாஜக அமைக்கப்போகும் கூட்டணி எம்மாதிரியான தாக்கத்தை வெளிப்படுத்தும் என்ற கணிப்பை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசும் போது, பாஜகவினர் - பிரதமர் மோடியும் கூறுவதை போல இந்தியாவில் 370 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவது கடினம் என்று தெரிவித்து, ஆனால், தமிழ்நாட்டில் இரட்டை இலக்கங்களில் பாஜக வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.