ஒரு தொகுதியில் கூட .. பிரசாந்த் கிஷோர் கட்சியின் நிலை; பாஜகதான்..
ஒரு தொகுதியில் கூட பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி முன்னிலை பெறவில்லை. பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும்நிலையில், பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:
தேசிய ஜனநாயக கூட்டணி - 191 (பா.ஜ.க. - 80 , ஜே.டி.யு. - 84 , எல்.ஜே.பி. - 22, ஆர்.எல்.எம். - 1 , மற்றவை - 4)
இந்தியா கூட்டணி - 49 (ஆர்.ஜே.டி. - 37 , காங்கிரஸ் - 7 , இடது சாரிகள் - 5)
ஜன் சுராஜ் -0
மற்றவை - 3
பாஜகவில் முக்கிய தலைவர்கள் அனைவரும், தங்களது தொகுதியில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்து வருகின்றனர். 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 76க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.