Getout கையெழுத்து இயக்கத்தை துவங்கிய விஜய் - மறுப்பு தெரிவித்த பிரசாந்த் கிஷோர்
தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்று வருகிறது.
தவெக
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில், விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தவெகவின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று(26.02.2025) செங்கல்பட்டில் உள்ள பூஞ்சேரியில் நடைபெற்று வருகிறது.
கையெழுத்து இயக்கம்
இதில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டுள்ளார். நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் இன்று விஜய் முன்னிலையில் கட்சியில் இணைகிறார்.
இந்த நிகழ்வில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக, கெட் அவுட் என்ற ஹேஷ்டேக் அடங்கிய கையெழுத்து இயக்கத்தை நடிகர் விஜய் கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தார். விஜய்யை தொடர்ந்து, கட்சியின்பொதுச்செயலாளர் ஆனந்த் கையெழுத்திட்டார்.
அவர் கூலி ஆள்
— MAHES (@mahesbjp) February 26, 2025
இவர்களது கொள்கை க்கு அவர் ஒத்து போக அவசியமில்லை
ஆனாலும் அவரை கையெழுத்து போட சொல்கிறார்கள்
என்ன இழவோ
மும்மொழி கொள்கையை ஆதரிக்கிறார்
பிரசாந்த் கிஷோர்#இரண்டாம்_ஆண்டில்_தவெக #TVKMeeting pic.twitter.com/VdZcr1pBb9
அடுத்ததாக பிரசாந்த் கிஷோரை கையெழுத்திட அழைத்த போது, அவர் மறுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.