இது நடந்தால்.. 1 மணி நேரத்தில் மது விலக்கு ரத்து - பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு!
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக மது விலக்கு நீக்கப்படும் என்று பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
மது விலக்கு
பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ்) மூத்த தலைவர் குமார் சௌரவ், ஜன் சூராஜ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அப்போது பேசிய ஜன் சூராஜ் கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங், மதுவிலக்கை நீக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாயை உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ₹5 முதல் ₹6 லட்சம் கோடி கடன்களைப் பெறுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு
ஜன் சூராஜ் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு உடனடியாக நீக்கப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தத் தடையால் மாநிலம் ஆண்டுதோறும் சுமார் ₹28,000 கோடி இழக்கிறது. அந்தப் பணத்தை பீகார் பொருளாதாரத்தை மேம்படுத்தப் பயன்படுத்தலாம்.
இதன் மூலம் மாநிலத்திற்குக் கூடுதலாக ரூ.28 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். இதை வைத்து உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் இருந்து ரூ.5 முதல் ரூ.6 லட்சம் கோடி கடன்களைப் பெற முடியும். பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு இதைப் பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர் கடந்த 2022ம் ஆண்டு பீகாரில் ஜன் சூராஜ் கட்சியைத் தொடங்கினார். அப்போது முதலே ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்திற்குள் மதுவிலக்கை ரத்து செய்வதாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.