மோடியின் காலில் விழுந்து அவமானப்படுத்திட்டாரு - நிதிஷ்குமாரை விளாசிய பிரசாந்த் கிஷோர்

Narendra Modi Prashant Kishor
By Sumathi Jun 15, 2024 06:59 AM GMT
Report

மோடியின் கால்களில் விழுந்து நிதிஷ்குமார் அவமானப்படுத்தியுள்ளதாக பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர்

ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர், பாகல்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அதில் பேசிய அவர்,

prashant kishore

"நிதிஷ்குமாருடன் கடந்த காலத்தில் பணியாற்றிய நான் இப்போது அவரை ஏன் விமர்சிக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். அப்போது அவர் வித்தியாசமான மனிதர். அவரது மனசாட்சியை விற்பனைக்கு வைக்கவில்லை.

ஒரு மாநிலத்தின் தலைவர். அதன் மக்களின் பெருமை. ஆனால், பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து நிதிஷ்குமார் பீகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தினார்.

அது நடந்தால் மட்டும்தான் பாஜக நெருக்கடியை உணரும்.. ஆனால் அது நடக்காது - பிரசாந்த் கிஷோர் வியூகம்!

அது நடந்தால் மட்டும்தான் பாஜக நெருக்கடியை உணரும்.. ஆனால் அது நடக்காது - பிரசாந்த் கிஷோர் வியூகம்!

பாஜக ஆதரவுடன் ஆட்சி

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகிப்பதாக பலரும் பேசுகிறார்கள். ஆனால் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்? அவர் தனது செல்வாக்கை மாநிலத்துக்கான நன்மைகளை உறுதிப்படுத்த பயன்படுத்தவில்லை.

nitish kumar - modi

2025 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகும், பாஜக ஆதரவுடன் தான் ஆட்சியில் நீடிப்பதை உறுதிசெய்ய அவர் பிரதமர் மோடியின் கால்களைத் தொடுகிறார்” என விமர்சித்துள்ளார்.