பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரதம் - பின்னணி என்ன?
பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
பிரசாந்த் கிஷோர்
பிபிஎஸ்சி தேர்வுகளால் பாதிக்கப்பட்ட பல தேர்வர்கள் இரண்டு வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தேர்வர்கள் கூறியபடி,
இந்தத்தேர்வை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்த வேண்டும் எனக்கூறி கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நிதிஷ்குமார் அரசுக்கு 48 மணி நேரம் பிரசாந்த் கிஷோர் கெடு விதித்து இருந்தார். ஆனால் அரசு இதனை கண்டுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிரசாந்த் கிஷோர், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்வது, புதிய தேர்வுகளை நடத்துவது முதலான கோரிக்கைகளை உள்ளடக்கியது இந்தப் போராட்டம்.
சாகும் வரை உண்ணாவிரதம்
தேர்வு நடத்தி அதன் மூலம் நிரப்பப்படும் பணிகளை விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபட்ட ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் 70-வது பிபிஎஸ்சி (Bihar Public Service Commission) முதல்நிலைத் தேர்வு கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. இதில், வினாத்தாள் கசிவு, தேர்வு அறைகளில் சிசிடிவி கேமராக்கள் இயங்காதது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாகவும்,
எனவே நடந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.